விருத்தாசலத்தில், +2 படித்துவிட்டு இவர் செய்த வேலையை பாருங்கள்! மக்கள் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் +2 படித்த ஒருவர் மருத்துவராக சிகிச்சை அளித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி மருத்துவர் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததால் அங்கு விசாரணை நடத்த விருத்தாச்சலம் மருத்துவ அதிகாரிகள் சென்றனர். 

விருத்தாச்சலம் தலைமை மருத்துவர் தலைமையிலான குழுவினர் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள கிளினிக்கில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு அவர் மருத்துவ கருவிகள் அல்லோபதி மருந்துகளை வைத்து சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரிடம் விசாரித்ததில் அவர் மருத்துவம் படிக்கவில்லை என்பது உறுதியானது. 

விசாரணையில் அவர், விருத்தாசலத்தை  சேர்ந்த சங்கர் (வயது 45) என்பதும், பிளஸ்-2 வரை படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.  இது குறித்து மருத்துவக்குழுவினர் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். 

கைதான சங்கர், கடந்த ஆண்டு ஒரு பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்து, அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள வழக்கு விருத்தாசலம் நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fake doctor given treatment to people arrested by police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->