இதுவரை நடத்தப்படாத தேர்வு! கணினித்துறை பட்டதாரிகளுக்கு அசத்தல் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, 8000க்கும் அதிகமான ஆசிரியர் பணிக்கு இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கடந்தாண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வு, போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வந்தது தேர்வு வாரியம். ஆனால் இதுவரை கணினி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படவில்லை.

இதனால் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான படிப்பினை முடித்தவர்கள் அரசு வேலை பெற முடியாத நிலையில் தனியார் பள்ளியிலும், பிற துறையிலும் பணியாற்றிவந்தனர். இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுநிலை கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை முதுநிலை கணினி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும் இதனை பற்றி தெரிந்துள்ள www.trb.tn.nic.in என்ற இணைய முகவரியில் தகவல்களை பெறலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

exam for computer sience teacher


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->