கொங்கு மண்டலத்தில் அடித்த அடியில் மூடப்படும் டாஸ்மாக் கடைகள் - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..? கொண்டாட்டத்தில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசால் நடத்தப்பட்டுவரும் மதுபான கடைகள் தான் தமிழகத்தில் நடக்கும் பாதி குற்ற சம்பவங்களுக்கு காரணம் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றது. மேலும் இந்த டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளில் தினமும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

யாரை சொல்லியும் குற்றமில்லை, தமிழக அரசின் முக்கிய வருமானவே இந்த டாஸ்மாக் கடைகள் தான். இதனை மூடிவிட்டால் தமிழக அரசு இயங்காது என்று தமிழக அமைச்சர்களே தெரிவித்து வருகின்றனர். ஒரு நாள் டாஸ்மாக் கடை இயங்காவிட்டால் தமிழக அரசுக்கு பல கோடிக்கணக்கில் வருமானம் இழப்பு ஏற்படும்.

இந்த நிலையில், ஈரோட்டில் விளை நிலங்களில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகம் முழுவதும்  விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் எத்தனை? என்று கேள்வி எழுப்பியதோடு, டாஸ்மாக்கில் சிறுவர்கள் மது அருந்துவதை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்தினால் என்ன? என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு  110 கடைகள் விளை நிலங்களில்  அனுமதி பெறாமல் செயல்படுவதாகவும், 3,000 டாஸ்மாக் கடைகளில்  சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அனுமதி இன்றி விளை நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட உத்தரவிட்டனர்.

எதிர்கட்சி தலைவராக இருக்கும் ஸ்டாலின் கூட மதுபான கடைக்கு எதிராக கண்டனம் மட்டுமே தெரிவிக்கிறார். பூரண மது விளக்கு கொண்டு வர எந்த கொள்கை முடிவையும் இதுவரை அறிவிக்கவில்லை.

ஆனால் விவசாயி ஒருவர் தனி ஆளாக நின்று போராடி வெற்றி கண்டுள்ளார். அவரால் முடிந்தது,  இவ்வளவு பெரிய அரசியல் கட்சியால் முடியவில்லையா என்று மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erodetasmac-court-order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->