வகுப்புகளைப் புறக்கணித்து..! ஆரம்பப் பள்ளி மாணவர்கள் போராட்டம்..!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மேலச்சாலுார் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 321 மாணவர்கள் படிக்கின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளில், மாணவர் பற்றாக்குறை இருக்கும் போது, இந்தப் பள்ளியில் மாணர்வகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

ஆனால், இத்தனை மாணவர்களுக்கு, குறைந்த பட்சம் 10 ஆசிரியர்களாவது, இந்தப் பள்ளியில் பணியாற்ற வேண்டும், ஆனால், தலைமை ஆசிரியர் உட்பட, 8 ஆசிரியர்கள் தான் பணியாற்றுகின்றனர்.

நடப்புக் கல்வி ஆண்டில், 2 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால், இது வரை, அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கலந்தாய்வில், இந்தப் பள்ளியில் காலியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட வில்லை.

எனவே, உடனடியாக, ஆசிரியர்களை நியமிக்க கூறி, இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள், நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து, பள்ளி முன்பாக அமர்ந்து கோசம் போட்டபடி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

அந்த மாணவர்களுக்கு அதரவாக, அவர்களது பெற்றோர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, மேலச்சாலுார் பள்ளியில் பணியிடம் நிரப்பப் படாமல் மறைக்கப் படுவதாகக் கூறி, சிவகங்கையில் கலந்தாய்வு நடைபெற்ற மருதுபாண்டியர் பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆஞ்சலோ இருதயசாமி பேச்சு வார்த்தை நடத்தி, காலியிடங்களை நிரப்புவதாக உறுதி அளித்த பின், ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ELEMENTARY SCHOOL STUDENTS PROTEST


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->