இன்று பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி, அதிரடி உத்தரவை பிறப்பித்த பள்ளி கல்வி இயக்குனர்.! - Seithipunal
Seithipunal


புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய திட்டதை கொண்டுவரவேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உட்பட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22 ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலவரையின்றி தொடரும் இந்த போராட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல், மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அவர்களது கல்வியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் பிப்ரவரி கடைசி வாரத்தில் பொதுத்தேர்வுகள் ஆரம்பமாக உள்ளநிலையில் ஆசிரியர்களை பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.மேலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

                  

மேலும் போராட்டத்தை தொடர்பவர்கள்  பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனவும் பள்ளி கல்வி துறை அறிவித்தது.

இதனை தொடர்ந்து 80 சதவீத ஆசிரியர்கள் நேற்று இரவு 7 மணிக்குள் பணியில் சேர்ந்துள்ளனர்.

இதனையடுத்து பணிக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவும்,மேலும்  இன்று பணியில் சேர வருபவர்களுக்கு பள்ளி பணியிட மாறுதல் வழங்க வேண்டும் எனவும்  பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education minister announcement for teacher who joing in duty today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->