முதல் பிரச்சாரத்திலேயே தேமுதிகவிற்கு ஆதரவாக களமிறங்கிய எடப்பாடி!! சொந்த ஊரில் துவங்கிய வாக்கு சேகரிப்பு!! - Seithipunal
Seithipunal


வருகிற ஏப்ரல் 18-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதை தமிழகத்தில் அதிமுக, திமுக, பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணிகள் அமைத்து தேர்தல் வியூகம் வகுத்து வருகின்றது. 

தற்பொழுது, ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்கள் பற்றி தகவல்கள் வெளியாகின்றன. இதனால், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தொடர்ந்து தொகுதிகளுக்கு சென்று வேட்பாளர்கள் நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட நகர்விற்கு தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி இன்று 22 ம் தேதி தனது சொந்த ஊரான சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். கள்ளக்குறிச்சி அருகே வாழப்பாடி கருமாந்துறையில் காலை விநாயகர் கோவிலில் தேமுதிக இளைஞர் அணி தலைவரும், கள்ளக்குறிச்சி வேட்பாளருமான சுதீஷ் ஆகியோருடன் தேங்காய் உடைத்து தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவங்கினார்.

பின்னர், கள்ளக்குறிச்சி தொகுதியில் ,அதிமுக கூட்டணியில் இருக்கின்ற தேமுதிக சுதீஷ் போட்டியிட உள்ள நிலையில், அவருக்கு ஆதரவளித்து வாக்கு சேகரிக்க துவங்கியுள்ளார். தற்பொழுது சேலம் கருமாந்துறையில் வேட்பாளர் சுதீஷுக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சட்டத்துறை அமைச்சர் சீவி சண்முகம் உடனிருந்தார். இதன் பின்னர் சேலம், வேலூர் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் முதல்வர் அங்கிருந்து தர்மபுரி செல்ல இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edapadi starts campaign in kallakurichi for Dmdk sutheesh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->