'ஸ்டாலினின் பேச்சை கூட்டணி கட்சிகளே மதிப்பதில்லை' பிரதமர் முன்பு, முதல்வர் பேச்சு!!  - Seithipunal
Seithipunal


இன்று அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் கோவை கொடீசியா மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம்  நடைபெற்றது. அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகையில்,  பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி,

"திமுக 2ஜி முறைகேடு மூலம் தமிழகத்தை தலைகுனிய செய்தது. 130 கோடி மக்கள் வாழும் இந்திய தேசத்தில் மோடியை மட்டுமே பிரதமராக ஏற்றுள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் தேடப்பட்டுக்கொண்டிருக்கிறார். 

ஸ்டாலினின் பிரதமர் குறித்த கருத்தை அவர்களின் கூட்டணி கட்சிகளே ஏற்கவில்லை. ஊழல் தொடர்பாக மிகப்பெரிய ஊழல் செய்த திமுகவினர்  பிரச்சாரம் செய்வது வேடிக்கை. 

தமிழக அரசு நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. நதிநீர் இணைப்பு திட்டம் வந்தால் தண்ணீர் பிரச்சினை இருக்காது.   மத்திய அரசு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 

தமிழகம் பற்றும் புதுச்சேரியில், அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமர் மோடிக்கு வெற்றியை தரும். மீண்டும் மோடி தான் பிரதமராக வேண்டும். சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் 40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. 

மழைநீரை சேமிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் .வளம் காணவும், எதிர்காலம் சிறப்பாக இருக்கவும் மோடியை மீண்டும் பிரதமராக்குவோம்." என அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi speech in covai meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->