பலத்த காற்று காரணமாக ரயில்கள் நிறுத்தம்!. பயணிகள் கடும் பாதிப்பு!. - Seithipunal
Seithipunal



பலத்த காற்று காரணமாக, ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில், இரண்டாவது நாளாக ரயில் போக்குவரத்து பல மணி நேரம்  தடைபட்டதால், பயணிகள், ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் பகுதியில், மணிக்கு 55 கிலோ மீட்டர் முதல் 63 கிலோ மீட்டர் வரையில் பலத்த காற்று வீசியது. இதனால் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வந்த பயணிகளுடன் வந்த ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து மற்றொரு மார்க்கத்தில் இயக்கப்பட்டது. 

ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு சென்னை செல்லும் விரைவு ரயிலும், இரவு 8 மணிக்கு சென்னைக்குப் புறப்படும் சேது எக்ஸ்பிரசும், ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

காற்றின் வேகம் குறைந்ததன் காரணமாக, சென்னைக்கு மாலை 5 மணிக்குச் செல்லும் விரைவு ரயில், ஐந்து மணி நேரம் தாமதமாக, இரவு 10.15  மணிக்கு  இயக்கப்பட்டது. இதனால், ரயில் பயணிகள், ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

இன்று காற்றின் வேகம் சற்று குறைந்துள்ளதால் இன்று ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to heavy winds, trains in Rameswaram Pamban Bridge are not operated.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->