புத்தாண்டின்போது இதை செய்தால் மொத்தமும் பறிபோகிவிடும், காவல்துறை அதிரடி அறிவிப்பு ! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் 2019 புதிய ஆண்டு நாளை பிறக்கவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும்  தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அது மட்டுமின்றி புது ஆண்டை வரவேற்கும் விதமாக நட்சத்திர ஓட்டல்கள், வணிக வளாகங்கள், உள்ளிட்ட பல இடங்களிலும் ஆடல், பாடல்  என கோலாகலமான  கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க சென்னை காவல்துறை தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து மாநகர காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க  சுமார் 15,000 காவலர்கள் பாதுகாப்பு பாணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் டிசம்பர் 31, இரவு 9.00 மணியிலிருந்து முக்கிய இடங்களான மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், அடையாறு என மொத்தம் 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிண்டி. அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் பகுதிகளில் பைக் ரேஸ் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும்,மக்களின் பாதுகாப்பிற்காகவும் மெரினா, சாந்தோம், காமராஜர் சாலைகளில் போலீஸ் உதவி மைய கூடாரங்கள் அமைக்கபட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் குற்றம் செய்தவரின் தகவல்கள் குற்ற ஆவணக்காப்பகத்தில் பதிவு செய்யப்படும். இதனால் பாஸ்போர்ட், விசா சரிபார்ப்பின் போது தடையில்லா சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

driving licence will cancel while drunk and drive


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->