அன்புமணி தயார் என அதிரடி அறிவிப்பு! பரபரப்பாகும் அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


சர்க்கார் பட விவகாரம்! சர்க்கார் பட போஸ்டர் விவகாரமாக திரையுலகினரின் தரப்பு நியாயத்தை பாமக தலைவர் அன்புமணியிடம் விவாதம் தான் தயார் என சிம்பு கூறியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
 
விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இருந்தது.அதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

விஜய் போன்ற பெரிய நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் மேலும் ஏற்கனவே விஜய் புகைப்பிடிப்பது போன்று நடிக்க மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அன்புமணி தெரிவித்திருந்தார்

தொடர்புடைய படம்


இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அதில் 'பாபா' முதல் 'சர்கார்' வரை இந்த புகைபிடிக்கும் விவகாரம் பிரச்சனையாக உள்ளது, இதற்கு முடிவு கட்ட ஒரு விவாதம் நடத்தினால் அதில் தான் பங்கேற்று திரையுலகினர் தரப்பு நியாயத்தை கூற தயாராக இருக்கிறேன்.

அன்புமணி அவர்களுக்கு சம்மதம் என்றால் இந்த விவாதம் நடத்தப்படும் தேதி, இடத்தை அவரே அறிவிக்கலாம் என்றும் சிம்பு கூறியுள்ளார். 

இதற்கு இன்று பதிலளித்த பாமக இளைஞரணித்தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், எந்த ஒரு நடிகர் மீதும் காழ்ப்புணர்ச்சியோ வன்மமோ எனக்கு இல்லை. அந்த நடிகரும் அவருடைய ரசிகர்களும் புகைப்பழக்கத்தினால் பாதிக்கப்பட கூடாது என்பதாலயே கருத்து தெரிவித்தேன்

ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விளக்கம் கொடுக்க முடியாது. அதனால் ஒட்டுமொத்த நடிகர்களும் இயக்குநர்களும் ஒன்றாக கூடுங்கள். அப்போது என்னிடம் கேளுங்கள், புகைப்பழக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் சினிமா துறையின் பங்கு குறித்தும் நான் விளக்கம் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr anbumani ready to argue with cini persons for smoking causes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->