எதிர்க்கட்சிகள் அனைவரும் அமைதியாக இருக்க, களத்தில் இறங்கிய அன்புமணி..! தடையை உடைத்து அன்புமணி கருத்து கேட்பு கூட்டம்..!!! - Seithipunal
Seithipunal


தற்போது, தருமபுரி மாவட்டம்,இருளப்பட்டி என்ற ஊரில், சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து சம்மந்தப்பட்ட விவசாயிகளுடன் சந்திப்பு மற்றும் மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு பேசி வருகிறார்.  

சென்னையில் இருந்து சேலத்திற்கு செல்ல புதியதாக பசுமை வழி சாலை அமைக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த திட்டத்தை மத்திய அரசிடம் போராடி பெற்றுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இந்த சாலையானது சென்னையில் தொடங்கி சேலம் வரையில் இடையே 277 கி.மீ. தூரத்துக்கு பசுமை வழி சாலையாக அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடியாகும். 

இந்த சாலையானது சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும், இந்த பசுமை வழி சாலை 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதனிடையே 5 மாவட்ட விவசாயிகளும், விவசாய நிலத்தை கையகப்படுத்தி போடப்படும் சாலை வேண்டாம் என்று போராடி வருகின்றனர்.

தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகிறார்.  காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் தொடர்ந்து தற்போது தருமபுரி மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்டு வருகிறார்.
 
அப்போது விவசாயிகள், அன்புமணியிடம் தெரிவித்ததாவது:- 

5 மாவட்டங்களில் உள்ள விவசாயிங்களை ஒன்றாக இணைந்து போராட்டங்களை நடத்த உள்ளோம்.  அதற்கு தங்கள் முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய விவசாயிகள், இந்த பிரச்சனையில் உங்களை நம்பி தான் உள்ளோம். இந்த பிரச்னையை உங்களால் மட்டுமே தீர்க்க முடியும் . நீங்கள் தான் எங்களை காப்பற்ற வேண்டும் என்றனர். 

மேலும் கையகப்படுத்தும் நிலங்களை அன்புமணி ராமதாஸ் பார்வைஇட்டார்.  

    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Meet Former 8 Way Road


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->