கொஞ்சூண்டு எரிபொருளுக்கு கணக்கு பார்த்தால்.. நீங்கள் தூக்கி எறியப்படும் இடம்..? உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ளா முருகன் கோவில் மலைப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கார் கவிழ்ந்தது.

அம்மாவாசை தினத்தை முன்னிட்டு ஊத்துக்குளி ஜேடர்பாளையத்தை சேர்ந்த ஒரு பெரியவர் ஒருவர் தனது மகள் மற்றும் 5 வயதுடைய பேத்தியுடன் சென்னிமலை முருகன் கோவிலுக்கு காரில் வந்திருந்தார்.

பிறகு சாமி தரிசனம் செய்து விட்டு மாலை சுமார் 4.30 மணியளவில் முருகன் கோவிலில் இருந்து காரில் கீழே வந்து கொண்டிருந்தார்.

அப்போது மேலிருந்து வரும் போது முதலில் உள்ள வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக 20 அடி பள்ளத்தில் அவரது கார் கவிழ்ந்தது.

அந்த காரில் வந்த அனைவருமே அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி தப்பினார்கள். பிறகு அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வேறு கார் மூலம் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

மலை மேல் இருந்து அந்த கார் கீழே வரும் போது கியரில் வராமல் நியூட்டரில் வந்ததால் ஸ்டியரிங் லாக் ஆகி திருப்ப முடியாமல் பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிகிறது.

நியூட்டரில் செல்லாதீர்கள்:

கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் என எதில் சென்றாலும் மலைப் பாதைகளில் இறங்கும் போது தயவு செய்து நியூட்டரில் செல்லாதீர்கள். அது பெரும் விபத்தை ஏற்படுத்தும்.

இதே போலவே கடந்த தை அமாவாசை தினத்தன்று இதே போல ஒரு பெரியவர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தனது திருமண வயது மகளுடன் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்து விட்டு கீழே வந்து கொண்டிருந்தார். வரும்போது அவர் வண்டியை ஆஃப் செய்து நியூட்டரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர் பாராத விதமாக கியர் தானாகவே விழுந்ததால் பைக் நிலை தடுமாறி இருவரும் நடு ரோட்டில் விழுந்தனர். இதில் அந்த பெரியவரின் காலில் பலத்த அடி ஏற்பட்டு ரோடு முழுக்க ரத்தமாக காட்சியளித்தது.

அதனால் நீங்கள் மட்டுமின்றி உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள். பெட்ரோல், டீசலை மிச்சப்படுத்துகிறேன் என மலைப்பாதைகளில் வண்டியை ஆஃப் செய்து நியூட்டரில் செல்ல வேண்டாம் என்று.

Source: நல்லசாமி, சென்னிமலை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

don't take neutral drive hill station


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->