தமிழகத்தை திண்டாடவைக்கும் அரசு மருத்துவர்களின் அதிரடி அறிவிப்பு,.!நோயாளிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சம்பள உயர்வு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து  மருத்துவர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மருத்துவர் சங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக அரசு மருத்துவர்கள், மத்திய அரசுக்கு இணையாக தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்பதை போன்ற பல கோரிக்கைகளை முன்னிறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு (JACGDA)  மூலமாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.                                                                     

ஆனால் இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதநிலையில், கடந்த செப்டம்பர் 21-ம் தேதி மருத்துவர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது . ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைத்து கோரிக்கைகளையும்  நிறைவேற்றுவதாக அவர்களிடம் வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டம் மருத்துவர்களால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் விஜயபாஸ்கர் அளித்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படாததால் மருத்துவர்கள் மீண்டும் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

 இதன்படி ‘டிசம்பர்  4-ம் தேதி நாளை  முதல் மாதம் முழுவதும்  தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மருத்துவர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctor announces strike in tamilnadu


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->