எப்பா, அந்த பாலத்தை தெர்மாக்கோலில் செஞ்சுடாதீங்க.! அப்புறம் என்னை வச்சு செய்வாங்க.!! அமைச்சர் செல்லூர் ராஜூ.!!! - Seithipunal
Seithipunal


மதுரை மாநகர் காளவாசல் சாலைச் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் கட்ட அடிகள் நாட்டு விழா நடந்தது. இந்த விழாவில் மாதிரி பாலம் செய்து வைக்க தெர்மாகோல் பயன்படுத்த வேண்டாம் என தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாநகராட்சியில், காளவாசல் சாலைச் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதால். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பதற்கான திட்டம் 2012 -13 ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது அறிவிக்கப்பட்டது . 

அதன்படி, ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காளவாசல் சந்திப்பில் ரூ 54 கோடி மதிப்பீட்டில் இந்தப் பாலம் கட்டப்படுகிறது. 4 வழித்தடம் கொண்ட  இந்த மேம்பாலத்தின்  மொத்த நீளம்  750. மீட்டர் ஆகும், 15 மாதத்திற்குள் கட்டி முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து, இன்று அதற்கான அடிக்கல் நாட்டுவிழாவும், சில பூமி பூஜையும் நடைபெற்றது. 

இந்தவிழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் மதுரை வந்தனர். அடிக்கல் நாட்டுவிழாவின் ஏற்பாடுகளை 'அமைச்சர் செல்லூர் ராஜூ' மிகச் சிறப்பாக செயுத்திருந்தார். இந்நிலையில் பாலத்தின் மாதிரியை அட்டைப் பெட்டி அல்லது வேறு ஏதும் பொருள் கொண்டு செய்யுங்கள். மாறாக எக்காரணம் கொண்டும் ''தெர்மாகோலில் செய்யாதீர்கள். அப்படி தெர்மாகோலில் செய்தால், அதை வைத்து மீம்ஸ் போட்டு என்னை இந்த நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள்'' என்று செல்லூர் ராஜூ நகைச்சுவையாக உத்தரவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

அவர் கேட்டுக்கொண்டது படியே அந்த மேம்பாலத்தை அட்டைப் பெட்டி போன்ற பொருளில் செய்து மேடையில் காட்சிக்கு வைத்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do not use thermocool tn minister warn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->