50 எல் வரை இறக்க ரெடி..! வாண்டடாக வந்து வாங்கி கட்டிக்கொண்ட தி.மு.க மூத்த பிரபலம்..? நைய புடைக்க காத்திருக்கும் தேர்தல் ஆணையம்..! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் தகுந்த ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை ரூ.37 கோடியே 46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 29 கிலோ தங்கம் 317 கிலோ வெள்ளி மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நன்னடத்தை விதிமீறல் தொடர்பாக சில கட்சிகள் மீது தொடர்ந்து புகார் வருகிறது. இந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

அதில் உண்மைத்தன்மை இருந்தால் அந்த புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். திமுகவை சேர்ந்த துரைமுருகன் ஒரு தொகுதிக்கு ரூ.50 லட்சம் வரை செலவு செய்வோம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்ட புகார் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்து வருகிறார்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும். தேர்தல் தொடர்பாக 3 லட்சத்து 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான அரசு ஊழியர்கள் இந்த பயிற்சிக்கு வந்துள்ளனர். பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி இலாகா ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk-ready-to-spend-50l-for-election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->