திடீர் பிளவு..! திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் - மூத்த நிர்வாகிக்கு மூக்குடைப்பு.! - Seithipunal
Seithipunal


2014-ஆம் ஆண்டில் திமுகவில் குழு மோதல் உச்சத்தில் இருந்தது. அப்போது கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களான மாவட்டச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, பகுதி செயலர் ஜெயராமன் ஆகியோர் தங்களை  சாதியின் பெயரால் திட்டியதாகக் கூறி, மு.க. அழகிரி ஆதரவாளர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தனர்.

அதன்படி ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது பொய்வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால்  ஆத்திரமடைந்த திமுக தலைமை, வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி பொய்வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு  காரணமான அழகிரி ஆதரவாளர்கள் எம்.எல்.ராஜ், அசோக்குமார், ராஜேந்திரன், முத்துவேல், வெள்ளையன் ஆகிய 5 பேரை கட்சியிலிருந்து நீக்கி 21.01.2014 அன்று  அறிவிப்பு வெளியிட்டது.

அதற்கு பிறகு பெரிய அளவில் எந்த மோதலும் கட்சிக்குள் நிகழவில்லை. தற்போது திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் - அழகிரி இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் தற்போது கட்சிக்குள்ளேயும் நிர்வாகிகள் அடிதடியில் இறங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இன்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி முன்னிலையில் தி.மு.கவினர் மோதிக் கொண்டனர்.

முதுகுளத்தூர் தொகுதி திமுக கலந்தாய்வுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் காதர் பாஷா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் சுப தங்கவேலனின் ஆதரவாளர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, தற்போதைய மாவட்டச் செயலாளர் காதர் பாஷா முத்துராமலிங்கத்தின் ஆதரவாளர்களை நோக்கி தங்கவேலனின் ஆதரவாளர்  மேடையை மறைத்து நிற்க வேண்டாம் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது.

கட்சியின் துணை பொதுசெயலாளர் முன்னிலையிலேயே மரியாதையின்றி ஒருவருக்கொருவர் அடிக்க பாய்ந்தது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk persons attack in-front of party higher official


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->