திமுக பிரமுகர் செய்த தேச விரோத செயல்..! மடக்கி பிடித்த கர்நாடக காவல் துறை.!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்செட்டி, உரிகம், தளி, ஜவளகிரி வனப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து 100க்கும் மேலான யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் வந்து செல்கின்றன.

இந்நிலையில், வனப்பகுதிகளில் சிலர் யானைகளை கொன்று தந்தங்களை கடத்துவதாக புகார் எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றதாக தருமபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நவீன் பிரசாத், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை சேர்ந்த பிரகாஷ் ஆகியோரை கர்நாடக காவல்துறை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 12 தந்தங்களையும் பறிமுதல் செய்தது.

இதுகுறித்த விசாரணையின் போது மேலும் சிலருக்கு யானை தந்தங்கள் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகர துணை ஆணையர் ராம்தேவ் சேபாட், இன்ஸ்பெக்டர் லோகித் ஆகியோர் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி வனப்பகுதிக்கு தமிழக காவல்துறை உதவியுடன் சென்று அஞ்செட்டியை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் காதர்பாஷா, அவரது கார் ஓட்டுநர் முத்துசாமி ஆகியோரை கைது செய்தனர்.

கர்நாடக காவல்துறையினர், திமுக பிரமுகர் காதர்பாஷா உட்பட 4 பேரையும் கைது செய்து பெங்களூருக்கு அழைத்து சென்றனர். இதனிடையே திமுக பிரமுகர் கடத்தப்பட்டதாக தவறான தகவல் பரவியது. இதனால் திமுக கட்சியினர் தேன்கனிக்கோட்டை அருகே காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டனர். திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார் கடத்தப்படவில்லை என்ற செய்தியை தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk personality arrested for elephant ivory kidnaped


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->