"இடுப்பை கிள்ளினாலும் பொறுத்துக்கோங்க"., ஏனென்றால், பாஜக ஆட்சிக்கு வந்துவிடும்!! எல்லைமீறும் திமுகவினர்!!  - Seithipunal
Seithipunal


இரண்டு நாட்களுக்கு முன்பு அண்ணா நகரில் sdpi கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்காக மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்ற முஸ்லிம் பெண்கள் திமுகவினரால் தாக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டனர். ஆனால், இதுகுறித்து ஊடகங்கள் பல எந்தவித குரலும் எழுப்பவில்லை. காரணம், இவை அனைத்தும் திமுக ஆதரவு ஊடங்களாக இருப்பது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டது திமுகவினர் என்பதால் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போன்று, திமுக ஆதரவு மீடியாக்கள் அனைத்தும் அமைதியாக கடந்து சென்றது. இதுபோன்று பாஜகவோ அல்லது வேறு ஏதேனும் கட்சியும் செய்து இருந்தால், அவர்களை சாதி சாயம் பூசி, அவர்களுக்கு மதச்சாயம் பூசி இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கி இதை வைத்து அரசியல் செய்து தமிழகத்தில் மிகப் பெரிய மத கலவரத்தை திமுகவினர் செய்திருப்பார்கள் என்பது மறுக்க முடியாதது. இது தான் போலி மதச்சார்பின்மை. 

திமுகவின் பகுதி செயலாளர் ஒருவரே துச்சாதனன் ஆக மாறி அந்த பெண்களை அவமரியாதை செய்து அடித்து விரட்டி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். இவர்களா ஆட்சியை ஏற்று பெண்கள் பெண்களை பாதுகாக்கப் போகிறார்கள்? முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு திமுக இவ்வாறு சிறுபான்மைக்கு எதிராக வன்மத்தை கட்டவிழ்த்து விடுவது முறைதானா?

பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை கோஷத்தை வைத்துக்கொண்டு திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை பொறுத்துக் கொள்வது எந்த வகையில் சரியாக இருக்கும்? தங்கள் சமுதாயத்தில் பெண்களின் கண்களை தவிர வேறெதையும் பிற ஆண்கள் பார்ப்பது கூட தவறானது என்ற கட்டமைப்பை கொண்ட முஸ்லிம்கள், இப்போது எதற்காக அமைதி காக்கிறார்கள்?

பாஜக ஜெயிக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தனது வீட்டுப் பெண்களின் மானம் போனாலும் பரவாயில்லை, என பொறுமையாக இருக்கின்றார்களா? முஸ்லிம் பெண்களின் பர்தாவை இழுத்தாலும் பாரவாயில்லை. பெண்களின் இடுப்பை கிள்ளினாலும் பரவாயில்லை. அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், பாஜக ஜெயித்துவிடும்..!

பாதிக்கப்பட்ட பெண்கள் பேசும் வீடியோ: 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk peoples atrocities has not limitation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->