மக்களவை தேர்தலில் திமுகவின் அரசியல் வாரிசு வேட்பாளர்கள் எதனை பேர் தெரியுமா?? - Seithipunal
Seithipunal



வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனை தொடர்ந்து அணைத்து கட்சியினரும் தேர்தல் வேலையை பரபரப்பாக பார்த்துவருகின்றனர். இந்தநிலையில்,  திமுக தலைமையிலான கூட்டணி தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். 

திமுக கூட்டணியில், திமுக 20, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக 2, மதிமுக 1, ஐஜேகே 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொமதேக 1 என 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் திமுகவில் இருந்து வாரிசு வேட்பாளர்கள், வரும் மக்களவை தேர்தலில் களமிறங்க உள்ளனர். திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுத்தகிகளில் 6 தொகுதிகளில், திமுகவில் இருந்து வாரிசு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

1. தூத்துக்குடியில் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி போட்டியிடுகிறார்.

 2. வேலூர்  தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

3. வட சென்னை தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி போட்டியிடுகிறார்.

4. மத்திய சென்னை தொகுதியில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார்.

5. கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிடுகிறார் 

6. தென் சென்னை தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன் போட்டியிடுகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Candidates


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->