எங்கு யாரை வைத்து தாக்கலாம்..? தயாராகும் திமுக.. ஓரிடத்தில் குவியும் முக்கிய புள்ளிகள் - வெளியாகும் முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


எதிர்மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாராகியுள்ளது. இன்று அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில்  8 தொகுதிகளில் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப்பங்கீடு முடிந்துள்ளது. எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார். கூட்டணி கட்சிகளுக்கு புதுச்சேரி உட்பட 20 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, மற்ற 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:

  1. கன்னியாகுமரி,
  2. விருதுநகர்,
  3. தேனி,
  4. சிவகங்கை,
  5. திருச்சி,
  6. கரூர்,
  7. ஆரணி,
  8. திருவள்ளூர்,
  9. கிருஷ்ணகிரி,
  10. புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கட்சி:

  1. மதுரை,
  2. கோவை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

  1. திருப்பூர்,
  2. நாகை,

விசிக:

  1. சிதம்பரம்,
  2. விழுப்புரம்,

மதிமுகவுக்கு ஈரோடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம், கொமதேகவுக்கு நாமக்கல், ஐஜேகேவுக்கு பெரம்பலூர் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சித் தலைவர்ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். திமுக வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு விட்டது.

இதில் 8 தொகுதிகளில் மூத்த தலைவர்கள், முன்னாள்அமைச்சர்களின் வாரிசுகள் போட்டியிட இருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  1. தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் (முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி),
  2. மத்திய சென்னை – தயாநிதி மாறன் (முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மகன்),
  3. வட சென்னை – கலாநிதி – (முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மகன்),
  4. தூத்துக்குடி – கனிமொழி (கருணாநிதி மகள்),
  5. வேலூர் – கதிர் ஆனந்த் (திமுக பொருளாளர் துரைமுருகன் மகன்),
  6. கள்ளக்குறிச்சி – பொன்.கவுதமசிகாமணி (முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மகன்),
  7. கடலூர் – கதிரவன் – (முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகன்),
  8. திருவண்ணாமலை – கம்பன் (முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மகன்)

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk-alliance-parties-constituencies-will-be-announce-today


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->