தேமுதிக பாஜக கூட்டணியில் திடீர் திருப்பம்..? தமிழக அரசியலில் மீண்டும் தொற்றிக்கொண்ட பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருவதாக இருந்தது. பின்னர் திடீரென நேற்று பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பாஜக தமிழக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் தமிழகம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சென்னை கிரவுண்ட் பிளாசாவில் அதிமுக பாஜக இடையே நாடாளுமன்ற தேர்தல் குறித்த கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் பேச்சுவார்த்தை முடிந்து பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதிமுக உடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்ட பின்னர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மற்றும் பாஜக முக்கிய பொறுப்பாளர்கள் கூட்டணி குறித்து பேச தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.

அதனையடுத்து  தேதிமுக உடனான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜக தமிழக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் இறுதியாக சென்றார். இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த பியூஸ் கோயல் வாயிலில் எல்கே. சுதீசுடன் 5 நிமிடம் தனியாக பேசிவிட்டு மீண்டும் உள்ள சென்றார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பியூஸ் கோயல் இது மரியாதை மற்றும் அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்கான சந்திப்பு என கூறினார்.

மோடி மற்றும் அமித்ஷா விஜயகாந்த் பற்றி விசாரித்ததாகவும், மேலும் விஜயகாந்த் தனது பழைய நண்பர் என்பதால் மரியாதையை நிமித்தமாக நடந்த சந்திப்பு என கூறினார்.

இந்நிலையில் தேமுதிக பாஜககூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் இறுதி கட்டத்திற்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk alliance with bjp still pending


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->