தீபாவளிக்கு ஊருக்கு போறிங்களா.? ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகைக்காண ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால் ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இதனையடுத்து இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில் மற்றும் பேருந்து சேவைகளை ஏற்படுத்தி வருகிறது.

இதில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. நாளை காலை 8 மணி முதல் ரயில் டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நாளை முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9ம் தேதியும், ஜூலை 13ம் தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 10ஆம் தேதியும், ஜூலை 14ம் தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11ஆம் தேதியும், ஜூலை 15ம் தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 12ம் தேதியும் பயணிக்க முடியும்.

இந்த முறை ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமைகளில் இருந்தே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே பயணிகள் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க விரைந்து முன்பதிவு செய்யலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali train ticket booking from tomorrow


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->