தனது கார் டிரைவருக்கே, டிரைவராக மாறிய மாவட்ட கலெக்டர் .ஆச்சரியத்தில் மக்கள் ..! - Seithipunal
Seithipunal


கரூரில் பணி ஓய்வு பெற்ற தன் கார்  டிரைவரை பின்னால் உட்காரவைத்து கலெக்டர் கார் ஓட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனுக்கு கார் டிரைவராக பணியாற்றி வந்தவர் பரமசிவம். இவர் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார்.

    à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà¯à®Ÿà¯ˆà®¯ படம் 

இந்நிலையில் கலெக்டர் அன்பழகன் தனது கார் டிரைவரின் பணி ஓய்வை பாராட்டும் விதமாக கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தார். 

அப்பொழுது அவர் பரமசிவம் கடந்த 35 ஆண்டுகளாக வாகன டிரைவராக சிறப்பாக பணிபுரிந்து வந்தார்.
தற்போது வயது முதிர்வின் காரணமாக பணி  ஓய்வு பெற்று செல்கிறார்.அதுமட்டுமில்லாமல் இரவு- பகல் என பாராமல் உரிய நேரத்தில் சாலை விதிகளை மதித்து எங்களின் பயணம் சிறக்க வாகன டிரைவர்கள்  உதவுகின்றனர். 

மேலும் மகாபாரதத்தில் இறைவனான கண்ணபிரானே அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து பாதுகாப்பாக வழிநடத்துவது போல வாகன ஓட்டுனர்கள் அதிகாரிகளை மிகுந்த கவனத்துடன் வாகனத்தை பாதுகாப்பாக இயக்கி பயணம் செய்ய உதவுகின்றனர்.

அவ்வாறு எனக்கு உதவியாக இருந்த டிரைவர் பரமசிவத்திற்கு நானே  ஒருநாள் டிரைவராக இருந்து வழியனுப்பி வைக்க விரும்புகிறேன் . என்று கூறினார் 
 
மேலும் விழா முடிந்ததும் டிரைவரிடம் இருந்து கார் சாவியை வழங்கிய  கலெக்டர் அன்பழகன் காரை தான் ஓட்டுவதாக கூறி பரமசிவத்தையும், அவரது மனைவியையும் பின்னால் காரில் அமரவைத்து  கலெக்டரே  காரை ஓட்டி காந்திகிராமத்தில் உள்ள டிரைவரின் வீட்டிற்கு சென்று அவர்கள் இருவரையும் இறக்கி விட்டார். 

     karur district collector anbazhagan க்கான பட முடிவு
 

கலெக்டரின் இந்த செயலை கண்டு அங்கிருந்தவர்களும், டிரைவர் பரமசிவத்தின் குடும்பத்தினரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

District Collector who became driver for his car driver, people shocked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->