இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இல்லத்திற்கு விரைந்த காவல்துறை.!! சன் பிக்சர்ஸ் போட்ட ட்விட்.!! அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள்.!!! - Seithipunal
Seithipunal


 

சன் பிக்சர்ஸ் தயாரித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "சர்கார்" படம் நேற்று தீபாவளியன்று வெளியானது.

இந்த படம் பல சிக்கலை கடந்து தாண்டி வந்துள்ளது. இப்படம் தீபாவளி அன்று வெளியாகி விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

இந்த நிலையில்., இந்த திரைப்படத்திற்கு எதிராக அதிமுக கட்சியினர் போர்க்கொடி தூக்கவே பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இந்த படத்திற்கு அதிமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் குதிக்க துவங்கினர். 

அதிமுக தொண்டர்கள் சர்கார் திரைப்படம் வெளியான திரையரங்களுக்கு சென்று போராட்டம் நடத்தியும்., கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட துவங்கினர். மேலும் திரைப்படத்திற்கு வைக்கப்பட்ட பேனர்களை அகற்றியும்., கிழித்தும் போராட்டங்களை நடத்த துவங்கினர். மேலும் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் செய்யாவிடில் பெரும் பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். 

இதனால் இந்த படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்கம் செய்வதற்கு படக்குழுவும்., தமிழக திரையரங்குகள் சங்கத்தினரும் உறுதி அளித்தனர். 

இதனை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸின் விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு காவல் துறையினர் திடீரென சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  இது குறித்து விளக்கம் அளித்த காவல் துறையினர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இல்லத்திற்கு பாதுகாப்பிற்க்காக சென்றுள்ளதாகவும்., அவரின் மீது எந்தவித வழக்கு பதிவும் இல்லை என்றும்., இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவரின் இல்லத்தில் இல்லை என்பதால் திரும்ப புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இது வழக்கமான கண்காணிப்பு பணிதான் என்று காவல் துறை விளக்கமளித்துள்ளது. இந்த செய்தியை சன் குழுமம் நிறுவனமே காவல் துறையினர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய போவதாக வதந்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. பின்னர் அரைமணிநேரம் கழித்த பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இல்லத்தில் இல்லாததால் திரும்ப காவல் துறையினர் சென்று விட்டதாக தனது மறு ட்விட்டை பதிவிட்டுள்ளது. இதன் காரணமாக சிறிது நேரம் பெரும் சர்ச்சை கிளம்பியது. 


இது குறித்து தற்போது தெரிவித்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் காவல் துறையினர் எனது இல்லத்திற்கு வந்தது உண்மை., நான் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர். எனது பாதுகாப்பை உறுதிப்படுத்தவே  காவல் துறையினர் வந்தனர். என் மீது கைது நடவடிக்கை ஏதும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார். 

English Summary

DIRECTOR A.R.MURUGATHASS HOME WILL PROTECT BY POLICE FOR A SECURITY REASON.

செய்திகள்Seithipunal