திடீரென அம்மா உணவகத்தை ஆய்வு செய்த தினகரன் ஆதரவாளர் : அரண்டு போன ஊழியர்கள்! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் அமைந்திருக்கும் அம்மா உணவகத்தை தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவுமான தங்கத்தமிழ் செல்வன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டார்.

தேனி மாவட்டத்திலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவுமான தங்கத்தமிழ் செல்வன், அம்மருத்துவமனையின் வளாகத்தில் அமைந்திருக்கும் அம்மா உணவத்தையும், அதன் செயல்பாடுகளையும் பார்வையிட்டார். 

அப்போது அவரை பார்த்த ஊர் மக்கள் அனைவரும், அவரை வரவேற்று, அம்மா உணவகத்தின் தற்போதைய நிலை மற்றும் அவற்றில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து தெரிவித்தனர்.

தங்கத்தமிழ் செல்வன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவாக இருப்பினும் கூட அவர், அவர் இவ்வாறு திடீரென ஆய்வு மேற்கொண்டதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் சற்று அதிர்ச்சியடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dinakaran supporter going to amma unavagam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->