பன்றிகளைப் பிடிக்கச் சென்ற இடத்தில்..! மாநகராட்சி அதிகாரிகள் நடந்த சோகம்..!! - Seithipunal
Seithipunal


மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லையில், சுற்றி உள்ள 5 கி.மீ. தொலைவில், யாரும் பன்றிகள் வளர்க்க தடை செய்யப் பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் போன்றவை பரவாமல் தடுக்க, இந்த தடை தொடர்ந்து அமலில் உள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில், பன்றிகள் சுற்றித் திரிவதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனால், இந்தப் பன்றிகளைப் பிடிப்பதற்காக, மதுரை, திருச்சி, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பன்றிகளைப் பொறி வைத்துப் பிடிக்க 18 பேர் வரவழைக்கப் பட்டனர்.

அவர்களுடன், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் குழுவினரும் சென்றிருந்தனர். நேற்று முன் தினம் 30 பன்றிகளையும், நேற்று 22 பன்றிகளையும், அவர்கள் பறிமுதல் செய்தனர். அனைத்துப் பன்றிகளையும், லாரியில் ஏற்றிக் கட்டி வைத்திருந்தனர்.

அப்போது, கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த பன்றிகளின் உரிமையாளர்கள், பிடித்த பன்றிகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக, அங்கு சிலர், உருட்டுக்கட்டை, கடப்பாறை போன்ற ஆயுதங்களுடன் வந்து, மாநகராட்சி அதிகாரிகளைத் தாக்கினர். இதனால், அவர்கள் நிலை குலைந்து போயினர். அதிகாரிகளின் வாகனங்களையும் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆனால், அந்தக் கும்பலில் இருந்தவர்கள், போலீசையும் தாக்கினர். இதனால், போலீசார், அந்தக் கும்பலில் தாக்குதலில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரைக் குண்டு கட்டாகத் துாக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று கைது செய்தனர்.

   

   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Didugal Corporation Officer attack Catching Pigs


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->