ஹிட்லரையே பணிய வைத்த “ஜெய்ஹிந்த்” செண்பகராமன் பற்றி தெரியுமா?! தெரிந்து கொள்ளவேண்டிய ஒருவர்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தென் கோடியில் உள்ள கன்யாகுமரியில் பிறந்தவர் இந்த செண்பகராமன். இவர் மாணவராகப் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, இந்திய விடுதலைப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்டார்.
    
இந்தியாவில் அப்போது தங்கி இருந்த, ஜெர்மனி நாட்டின் உளவாளியான, சேர் வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட், அந்த இளம் வயதிலேயே, செண்பகராமனின் தேச பக்தியைக் கண்டு வியந்து அவருக்கு உதவி செய்தார்.
    
அவருடைய உதவியில், செண்பகராமன் இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்தார்.
    
இத்தாலியில் இருந்த போது, இத்தாலிய இலக்கியம், விஞ்ஞானம் போன்றவற்றைப் படித்தார். பின்னர், ஸ்விட்சர்லாந்திலும் தனது படிப்பைத் தொடர்ந்திருக்கிறார்.
    
ஜெர்மனியில் தங்கியிருந்தபடியே, இந்திய ஆதரவு சர்வதேச கமிட்டி வாயிலாக, இந்தியாவின் விடுதலைக்கு, ஆதரவு திரட்டினார், செண்பகராமன்.
    
1933-ல், வியன்னாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், சுபாஷ் சந்திரபோஸை முதன் முறையாகச் சந்தித்தார், செண்பகராமன். தனது இந்திய தேசத் தொண்டர் படைத் திட்டம் பற்றி, சுபாஷ் சந்திரபோசுடன் உரையாடினார்.
    
அந்த உரையாடலின் முடிவில் தான், செண்பகராமன், ஜெய்ஹிந்த்…என்ற வார்த்தையை உச்சரித்தார். அதைக் கேட்ட சுபாஷ், பின்னாளில், அதே வார்த்தையை, தங்களது தாரக மந்திரமாகக் கொண்டார்.
    
1933-ஆம் ஆண்டு, ஜெர்மனியில், ஹிட்லரின் ஆட்சி ஏற்பட்ட போது, அவருடன் செண்பகராமனுக்கு நட்பு ஏற்பட்டது. அப்போது, ஒரு விவாதத்தில், சுதந்திரம் பெறும் உரிமை, இந்தியர்களுக்கு கிடையாது, என்றார்.
    
அதைக் கேட்டு கடும் கோபம் அடைந்த செண்பகராமன், ஹிட்லருடன் கடுமையாக விவாதம் புரிந்தார். அந்த விவாதத்தின் இறுதியில், ஹிட்லர் செண்பராமனிடம் மன்னிப்பு கேட்டார். அந்த மன்னிப்பை, தன் கைப்பட செண்பகராமனுக்கு எழுதிக் கொடுத்தார் ஹிட்லர்.
    
இதனால், நாஜிக்கள் செண்பகராமனின் சாப்பாட்டில் விஷம் வைத்து, 26-5-1934 அன்று அவரைக் கொன்றனர். ஆனாலும், செண்பகராமனின் வீரம் இன்றளவிலும் போற்றப் படுகிறது, உலக அளவில்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

did you know about jayinte shenankaraman who hired hitler


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->