தோனி என்டர்டெயின்மென்ட் அலுவலகத்தை சென்னையிலும் தொடங்கினார் தோனி! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்பொழுது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இது மட்டுமின்றி அவருக்கு மதுபானம், ஆடைகள் தயாரிப்பு, விவசாயம், பள்ளிகள் என பல தொழில்களை செய்து வருகிறார். தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஹிந்தி படங்களையும் அவர் தயாரித்து வருகிறார்.

இவர் தயாரிப்பில் இதுவரை மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளன சிஎஸ்கே அணி இரண்டு வருட தலைக்கு பிறகு மீண்டும் வந்தது குறித்த ஒரு திரைப்படமும் உலக கோப்பையை வென்றது குறித்த ஆவண படத்தையும் ஒரு தில்லர் படத்தையும் ஹிந்தியில் தயாரித்துள்ளார்.  

இந்த நிலையில் தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ் திரைப்படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல்கள் கசிந்தது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து பேசிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சில விளம்பர படங்களையும் தோனி நடித்துள்ளார். நடிகை நயன்தாராவிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில் தோனி தனது பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தை சென்னையில் திறந்துள்ளார். கூடிய விரைவில் தமிழ் திரைப்படம் ஒன்றின் தயாரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni Entertainment office was opened in Chennai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->