நாயகனாக களமிறங்கும் தோனி?! ஆக்‌ஷன் கதை! - சாக்‌ஷி தோனி விளக்கம்! - Seithipunal
Seithipunal


சென்னை: நல்ல கதை அமைந்தால் தோனி சினிமாவில் நடிக்கக் கூடும் என்று அவரது மனைவி சாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பில் உருவான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தற்போது தமிழில் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை, முதன்மை கதாபாத்திரங்களில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் நடிப்பில் தயாரித்துள்ளது. 

இப்படத்தை அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கியுள்ள, இந்தப் படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். மலையாள இசையமைப்பாளர் விஸ்வஜித் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியனது.

படக்குழு இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக உள்ள நிலையில், நேற்று சென்னையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

அப்போது படத்தின் தயாரிப்பாளர் சாக்‌ஷியிடம், “தோனி சினிமாவிலும் கால் பதிப்பாரா?” என்று கேட்டபோது அவர் தெரிவிக்கையில், "அவர் ஏற்கெனவே ஏராளமான விளம்பரங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களிலும் நல்ல கதை என்றால் அவர் அதில் நடிக்கலாம். 

அவருக்கு கேமரா பயம் கிடையாது என்பதால், எப்படி நடிக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். மேலும் அவர் 2006ஆம் ஆண்டு முதல் கேமரா முன்னால் நடித்து வருகிறார். 

ஏதேனும் நல்ல கதை அமைந்தால் அதில் அவர் நடிப்பார். அவருக்கான கதையை தேர்வு செய்ய வேண்டுமென்றால், நான் ஆக்‌ஷன் கதைகளைத் தான் தேர்ந்தெடுப்பேன். ஏன்னென்றால் அவருக்கு ஆக்‌ஷன் படங்கள் மிகவும் பிடிக்கும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni came cinema Sakshi Dhoni information


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->