திமுக ஓட்டுக்களை குறிவைத்து தாக்கும் தினகரன்?! காரணம் வெளியானதால் கலக்கத்தில் ஸ்டாலின்!!  - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக, பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தனது வாக்கு வங்கியை பலமாக்கி உள்ளது. இதில், திமுக இதர கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.

தினகரன் sdpi கட்சியுடன் மட்டும் கூட்டணி வைத்து, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்கள். வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனாகிய கதிர் ஆனந்தனை எதிர்த்து அமமுக வேட்பாளர் பார்த்திபன் போட்டியிடவுள்ளார். 

இன்று வேலூரில், "தனது மகனை தொகுதி மக்களுக்கு தத்து கொடுத்ததாக கூறும் துரைமுருகனை நம்பாதீர்கள். திமுக விரைவில் பாஜக உடன் இணைந்து விடும். இதுவரை காங்கிரஸுடன் அட்டைபோல் ஒட்டிக்கொண்டு இருந்தது. 

காங்கிரசால் காரியம் ஆகாது எனத் தெரிந்தால் அதனை விட்டு பாஜகவுடன் திமுக கைகோர்த்துவிடும். எனவே, மக்கள் அவர்களை நம்பி வாக்களிக்காதீர்கள்"  என தினகரன் வெகுவாக திமுகவை தாக்கி பேசியுள்ளார்.

மேலும், பல இடங்களுக்கு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் தினகரன், அதிமுகவை விட திமுகவையே அதிகம் எதிர்க்கிறார். இதற்கு காரணமாக, "ஆர்கே நகர் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கியை தினகரன் அவ்வளவு பாதித்ததாகத் தெரியவில்லை. ஆனால், திமுகவின் வாக்குகளை காலிசெய்து அதில் வெற்றி பெற்றார்.

காரணம் அதிமுகவின் தொண்டர்களை அவ்வளவு எளிதில் சிதைக்க இயலாது. சற்று கடினம் தான். ஆனால், திமுகவின் தொண்டர்களை பணத்தாசை காட்டி எளிதாக அவர்களது வாக்குகளை பெற்று விடலாம். திமுகவிற்கு நாணயமான தொண்டர்கள் கிடையாது. தொண்டர்களுக்கு நாணயமான தலைமையும் கிடையாது" என அரசியல் விமர்சகர்கள் பலர் கூறி வருகின்றனர். 

இதனாலேயே, தினகரன் திமுக ஓட்டுகளை குறிவைத்து ஸ்டாலினை டெபாசிட் இழக்கச் செய்வார் 'என கூறுகின்றனர். இதனால் திமுக தலைமை மற்றும் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhinakaran may be get Dmk votes in election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->