ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டிய தினகரன்!! சமாளிப்பாரா எடப்பாடி?!   - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக - பாமக - பாஜக இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. பாமக - அதிமுக ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அதன்படி 7 பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது. அதேபோல் ராஜ்ய சபா சீட் ஒன்றும் பாமகவிற்கு அளிக்கப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

மேலும் 21 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளது. பாமக 7 தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் 5ல் பாஜக போட்டியிட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

திமுக காங்கிரசுடன் கூட்டணி என வெளிப்படையாக அறிவித்துள்ளது. மேலும் எத்தனை சீட்டுகள் எனவும் அறிவித்துள்ளது. ஆனால், தினகரனுடன் கூட்டணி என்று யாரும் அறிவிக்கவில்லை. தற்பொழுது அதிமுக ஓபிஎஸ் அணியில் இருந்த ரஞ்சித் 3 மாதங்களுக்கு முன்னர் பாமகவில் இணைந்தார். 

இப்பொழுது, அவர் தினகரனுடன் கைகோர்த்துள்ளார். தினகரன் பாராளுமன்ற தேர்தலை விட இடைத்தேர்தலில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. 

18 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.அதில் பத்திற்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற தினகரன் முனைப்பு காட்டி வருகிறார். தற்போதைய சூழலில் அதிமுக குறைந்தது 9 தொகுதிகள் வெற்றி பெற்றால் தான் ஆட்சி நீடிக்கும் என்ற நிலை உள்ளது. 

அந்த நிலையில் தினகரன் 10 தொகுதிகளில் வெற்றிபெற்றால் ஆட்சியில் இருக்க வேண்டியது அதிமுகவா? திமுகவா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகும். எனவே தான் இந்த இடைத்தேர்தலில் தினகரன் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. 

ஆனால், அதிமுக அணியோ தங்களது ஆட்சியினை தக்கவைத்து கொள்ள தற்பொழுது பாமகவை துணைக்கு அழைத்துள்ளது. தினகரன் திட்டமிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாமக செல்வாக்கு பெற்ற கட்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhinakaran master plan to flop edapadi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->