நெல்லை மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள்! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தில் திருக்குறுங்குடி பகுதியில் மலை மீது அமைந்துள்ள பெருமாள் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளார். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 

நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா, ஏர்வாடி நகருக்கு அருகேயுள்ளது திருக்குறுங்குடி. இங்குள்ள மலை மீது பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. 4 கி.மீ தூரம் உள்ளது அந்த மலைப் பாதை. 

நம்பிமலையில் கோயில்கொண்டிருக்கும் "நம்பி ரிஷிகேசனாக மலைமேல் நம்பி" என்று அழைக்கப்படுகிறார். மொத்தம் 5 வடிவங்களில் பெருமாள் அருள்பாலிக்கும் தளமாகயுள்ளது. 

இக்கோயில்களுக்கு இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய சென்றார்கள். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நல்ல மழை பெய்யும் நிலையில், இங்கு மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கீழே வரமுடியாமல் மலையில் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்ததும், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devotees caught in the grating flood in nellai district


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->