இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்! - Seithipunal
Seithipunal


கஜா புயலை தொடந்து, வங்கக்கடலில் உருவாகவுள்ள பெதாய் புயலானது, 14ம் தேதி மாலை முதல் 16ம் தேதி இரவு வரையிலான காலக்கட்டத்தில் தமிழக கடற்கரையில் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிர நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இன்று தாழ்வு மண்டலமாக மாறி நேற்று முன் இரவு ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகி, இன்று புயலாக மாறும். மேலும் இந்த புயல் தீவிர, மிக தீவிர, அதி தீவிர புயலாக உருவெடுத்து டிசம்பர் 15 சனிக்கிழமை வட தமிழக கடற்கரையோர கடல் பகுதியை கடும் சீற்றத்திற்குள்ளாக்கும். இதன் காரணமாக சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலோரம் அதிக கடலரிப்பை ஏற்படுத்தும். 

இந்த புயல் டிசம்பர் 15 இரவுக்கு மேல் தமிழகத்தில் கடலூர், ஆந்திராவில் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும்.

இதனால் 15, 16-ம் தேதிகளில் தமிழக வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

december 15 16 rain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->