ஒருபுறம் டாஸ்மாக் கடையை மூட போராட்டம்!. மறுபுறம் கடையை திறக்க கோரி போராட்டம்!. இறுதியில் நடந்த முடிவு!. - Seithipunal
Seithipunal



திருப்பூரில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தியதை அடுத்து கடை மூடப்பட்டது.

திருப்பூரில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உழவர் சந்தை செல்லும் பாதையில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகள் அந்தவழியாகவே செல்கின்றனர் இதனால்  பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கு அவர்கள் போராட்டம் நடத்தியதால் தகவல் அறிந்துவந்த தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் மக்கள் கடையை அனுமதிக்க உறுதியான எதிர்ப்புத் தெரிவித்ததால் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை உடனே வெளியேற்றி கடையை மூட உத்தரவிட்டு  நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

உள்ளே குடித்துக்கொண்டிருந்த குடிமகன்கள் வெளியே வந்து  கடையைத் திறக்கக் கோரி தனியாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஒருபுறம் திறக்கக்கோரி போராட்டம், ஒருபுறம் கடையை மூட கோரி போராட்டம் நடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 இதன் காரணமாக மாலையில் மறுபடியும் திறக்கப்பட்ட கடை இரவில் மூடப்பட்டது. அங்கு குடிமகன்கள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் எரிச்சலடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Darna fought to demand the closure of the tasmak shop.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->