டார்ஜிலிங் சிறுமியை திருப்பூரில் மீட்ட போலீஸ்.! பேஸ்புக் காதலால் நடந்த விபரீதம்.!! - Seithipunal
Seithipunal


தற்போது வளர்ந்து வரும் காலகட்டங்களில், சமூக வலைதளங்களின் ஆதிக்கமும் வளர்ந்து கொண்டே வருகின்றன. இதனால் பல நன்மைகள் கிடைத்து வருகின்றன. அதேபோல் பல்வேறு தீமைகளும் நடந்து கொண்டு தான் வருகின்றன. இதனால் சிறுவர்கள் சீரழிந்து போகும் நிலையும் ஏற்படுகின்றது.

இந்த சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலால் வீட்டை வீட்டு கடந்த ஜனவரி மாதம் காதலனுடன் ஓடிய 15 வயது சிறுமி ஒருவர் திருப்பூரில் போலீசாரால் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டார்ஜிலிங்கில் உள்ள ஒரு 15 வயது சிறுமி ஒருவர், கடந்த ஜனவரி மாதம் பேஸ்புக் மூலம் ஒரு இளைஞரிடம் நட்பு கொண்டார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதால், இருவரும் ஒன்றாக திட்டமிட்டு வீட்டை விட்டு ஓட முடிவு செய்து ஓடியும் விட்டனர். அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தந்தை தனது மகளை கண்டு பிடித்து கொடுக்குமாறு போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில், ஓடிச் சென்ற அவர்கள் இருவரும் எங்கே இருக்கின்றனர் என்பதை கடந்த ஏழு மாதங்களாக தேடி வரும் நிலையில், கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில், அந்த சிறுமி தனது தாயின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பேசியுள்ளார். இதனை சிறுமியின் தாய் போலீசாரிடம் கூறிய உடன், அந்த சிறுமி திருப்பூரில் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு, சிறுமியையும் அவருடைய காதலரையும் திருப்பூர் போலீசார் மீட்டு, சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள், திருப்பூருக்கு வருவதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

darjling girl love on face book


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->