அந்தரத்தில் பறந்தும் விதி விடவில்லை.. இனோவா காரின் இரண்டு டயர்களும் மேலே ஏறியது: பதற வைக்கும் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு சில வருடங்களில் மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 5 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன.

இதில் 1.46 லட்சம் பேர் உயிரிழந் தனர். இதையடுத்து, சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. அதன் முக்கிய நடவடிக்கையாக, சாலைப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விபத்தில் சிக்குவோரை மீட்பது, சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட வற்றுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.3.8 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடுகிறது.

மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.

அதற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள் கட்டுதல், அதிகம் விபத்து நடக்கும் இடங்களைத் தேர்வு செய்து சாலை வடிவமைப்புகளை மாற்றுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. ஆனாலும், தமிழகத்தில் சாலை விபத்துகள் எண்ணிக்கை குறையவில்லை.

இந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ரோட்டை வேகமாக கடக்க முயன்ற சுமார் 46 வயது மதிக்க தக்க ஒருவர் மீது கார் மோதும் பதற வைக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

அந்த வீடியோ காட்சியில், நபர் ஒருவர் அவரசமாக ரோட்டை கடப்பதற்காக வேகமாக ஓடி வருகிறார்.

பாதிரோட்டை கடந்த இவர் ரோட்டின் அடுத்த பாதிக்கு செல்லும் போது வாகனங்கள் வருவதை சரியாக கவனிக்கவில்லை.

அப்பொழுது அந்த வழியாக இன்னோவா கார் வந்து கொண்டிருந்தது. இது எதிர்பாராத விதமாக ரோட்டை கடக்க முயன்ற வாலிபர் மீது மோதியது.

ரோட்டை கடக்க முயன்ற வாலிபரும் காரை கவனித்த சில நொடிகளிலே கார் அருகில் வந்து விட்டாதால் கண்ணிமைக்கும் நொடியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ள நிலையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு உயர் அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்காதது  சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சாலைப் பாதுகாப்பில் மட்டுமின்றி, அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் பின்னுக்குச் செல்கிறதா தமிழகம் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dangerous accident india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->