மேல ஏறி நின்னாலே கிடு கிடுனு அதிருது.. நாலு வண்டி ஒன்னா சேந்து போன தாங்குமா..? ஈரோட்டில் மரண பயம்..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்காவிற்கு அருகே உள்ளது ஈங்கூர் என்ற கிராமம். இப்பகுதி வழியாக  சேலம் ரயில்வே கோட்டத்துடன் இணையும் ரயில் பாதை செல்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் வாகனங்கள் ஈங்கூரில் அமைந்திருந்த  இரயில்வே கேட்டை தாண்டி தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் வாகனங்கள் சென்று வர மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இடையில் நடந்த சில குளறுபடிகள் காரணமாக பாலம் கட்டும் பணி பதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பிறகு திடீரென்று மளமளவென  கட்டுமான வேலைகள் நடக்க ஆரம்பித்து திறப்பு விழாவும் கண்டு விட்டது. பயன்பாட்டுக்கு வந்து சில வருடங்களே ஆகியுள்ள நிலையில், பழமையான பாலத்தை போல காட்சியளிக்கிறது.

சாலைகளில் இருக்கும் பள்ளங்களை போலவே பலத்தின் நடுவிலும் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இதன் வழியே பயணித்த பிரபாகரன் என்ற கட்டிட பொறியாளர், 'சாதரணமாக வாகனங்கள் சென்றாலே அதிர்வுகளை உணர முடிகிறது. அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் ஒரே நேரத்தில் இதில் பயணத்தால் பாலத்தின் கட்டுமானத்திற்கு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை நம்பி வெகு காலம் பயணிப்பது கடினம்' என்று கூறியிருக்கிறார்.

அரசின் தரப்பில் இருந்து பலகோடி நிதி ஒதுக்கப்பட்டாலும், அதிகாரிகளில் தொடங்கி, உள்ளூர் அரசியல்வாதிகள் வரை பாதி பணம் கமிஷனிலேயே சென்று விடுகிறது. மீதி உள்ள சொற்ப பணத்தில் அரைகுறையாக பாலங்களை கட்டி மக்கள் உயிரில் விளையாடி வருகின்றனர் ஆட்சியாளர்கள்.

தரமாக கட்டவில்லை என்றாலும், முறையாக பராமரிப்பாவது செய்திருக்க வேண்டும். அதுவும் செய்யாமல் விட்டு, இணைப்பு கம்பிகள் மேலே எழும்பும் நிலையில், ஆபத்தான ஒன்றாக மாறி வருகிறது. இந்த தகவல் உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

danger bridge in erode


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->