உலக அளவில் தமிழனின் பெருமையை நிலைநாட்டிய கோவை மருத்துவர்! ஆசியாவில் இருந்து முதன்முறையாக உலக தலைவராக தேர்வு! - Seithipunal
Seithipunal


சர்வதேச முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க தலைவராக, கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையின் எலும்பு முறிவு மற்றும் முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் எஸ்.ராஜசேகரன் பொறுப்பேற்க உள்ளார். இந்த சங்கத்துக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக பொறுப்பேற்க இருப்பதும் இதுவே முதல்முறையாகும்.

இன்று சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் ஆண்டு மாநாட்டில், டாக்டர் எஸ்.ராஜேசகரன், தற்போதைய தலைவர் நியூயார்க் நகரைச் சேர்ந்த டான் ரியூவிடம் இருந்து பொறுப்புகளைப் பெற்றுக் கொள்கிறார்.

இவர் 2021 வரை 3 ஆண்டுகளுக்கு தலைவர் பொறுப்பில் இருந்து முதுகு தண்டுவடம் தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில், சர்வதேச அளவிலான நிபுணர்களுக்கு டாக்டர் ராஜசேகரன் வழிகாட்டுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் புகழ்பெற்ற இந்த சங்கத்தில், 8,000-க்கும் மேற்பட்ட, உலகப் புகழ் பெற்ற முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை நிபுணர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். கல்வி மற்றும் நவீன ஆராய்ச்சிகளின் மூலம் சிறந்த சிகிச்சை அளிப்பது, நிபுணர்களின் அறிவுத் திறனை உயர்த்துவது, சர்வதேச அளவில் உள்ள நிபுணர்களின் கல்வி, அனுபவத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது, நோய்த்தொற்று, முதுகு தண்டுவட காயம், கட்டிகளை நவீன சிகிச்சை மூலம் தீர்க்க உதவுவது போன்றவற்றை இந்த சங்கம் முக்கிய நோக்கங்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 

இதுவரை  இந்த சங்கத்துக்கு வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து தலைவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில்,  முதல் முறையாக  ஆசிய கண்டத்தில் இருந்துடாக்டர் ராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

covai doctor selected world association leader 1st person of asia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->