பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் - உதவி என்று போனாலும் தப்ப முடியாது : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தருமபுரி அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்தவருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் முனிவேல் (25). இவருடைய நண்பர் ஒருவர் 15 வயது பள்ளி மாணவியை கடந்த 2016-ம் ஆண்டு வலுக்கட்டாயமாக கடத்தி சென்று இளம்வயது திருமணம் செய்தார்.

பின்னர் அந்த மாணவி பலாத்காரத்திற்கு உள்ளானார். இந்த சம்பவங்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக முனிவேல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துகைது செய்தனர்.

இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மாணவியின் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதற்காக முனிவேலுக்கு 3ஆண்டு சிறை தண்டனையும், இளம்வயது திருமணத்திற்கு உடந்தையாக செயல்பட்டதற்காக 2 ஆண்டு சிறைதண்டனையும், பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

மேலும், இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குள் ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகையாக முனிவேல் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோல் பாதிக்கப்பட்ட மாணவி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழக அரசின் பல்வேறு துறைகள் மூலம் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கவும் மாவட்டஆட்சியருக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court punished for minor marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->