தமிழகத்தில், பாதுகாக்கப்பட்ட பகுதியில்,  வீடியோ எடுத்து, தப்பி ஓடிய, பிரான்ஸ் நாட்டினர்…! எதற்காக இந்த சதி? - Seithipunal
Seithipunal


 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர், கன்யாகுமரிக்கு வந்திருந்தனர். அவர்களுடன், பொள்ளாச்சி மற்றும் சென்னையைச் சேர்ந்த, ஆவணப்படம் தயாரிப்பவர்களும் சென்றிருந்தனர். இவர்கள், எத்த வித ஆவணமும், அளிக்காமல், தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

ஆவணப்படம், எடுக்கப் போவதாகக் கூறிய இவர்கள், அப்படி ஏதும் செய்யாமல், விடுதியிலேயே தங்கி இருந்தனர். அந்தப் பகுதியில் இருந்த மதபோதகர் ஒருவர், இவர்களை, சின்ன முட்டம், வர்த்தக துறைமுகம் அமைய உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் தங்கள் கேமராவில், வீடியோ எடுத்தனர்.

பின், அவர்கள், ஐ.ஆர்.இ. பகுதிக்குச் சென்றனர். இது பாதுகாக்கப்பட்ட, மற்றும் தடை செய்யப்பட்ட பகுதி, என்பதால், வெளி நாட்டினர் வீடியோ எடுக்க, அங்கிருந்த, சின்னவிளை பகுதி மக்கள், அனுமதிக்கவில்லை.

ஆனால், அதையும் மீறி, அவர்கள், வீடியோ எடுத்தனர். இதனால், கிராம மக்கள், உளவுப்பிரிவு போலீசாருக்கு, உடனடியாகத் தகவல் தந்தனர். அவர்களும், உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தனர்.

அவர்களைக் கண்டதும், பிரான்ஸ் நாட்டினர், தப்பி ஓடி விட்டனர். போலீசாரும், அவர்களை வலை வீசித் தேடினர். தப்பி ஓடிய அவர்கள், இரவோடு இரவாக திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம், பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று விட்டனர்.

ஆவணப்படத் தயாரிப்பளர்களை, போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது, பேக்கேஜ் அடிப்படையில், சுற்றுப்புறச் சூழலுக்காக, ஆவணப்படம் எடுக்க வந்ததாகக் கூறினர்.

ஆனால், விசாரணையில், அவர்கள் ஐ.ஆர்.இ. மற்றும், துறைமுகத்திற்கு எதிராக போராடி வரும், முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது, தெரிய வந்தது.

இது தொடர்பாக, அந்த மதபோதகர், மற்றும், ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் இருவரிடமும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி, கன்யாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

conspiracy by France persons?


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->