பிரதமருக்கு எதிராக போராட்டம் - காங்கிரஸ் நிர்வாகிக்கு வீட்டு சிறை.! - Seithipunal
Seithipunal


பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு இன்று வருகை புரிகிறார். முதலில் அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் "என் மண் என்" மக்கள் யாத்திரையின்  நிறைவு விழாவில் கலந்துகொண்டு அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அத்துடன் தூத்துக்குடி செல்லும் பிரதமர் மோடி  நாளை நடைபெறும் அரசு விழா மற்றும் கட்சி  நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

இதற்கிடையே தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று மாநில எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் அறிவித்திருந்தார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது:- 'தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மோடி அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. நிதிப்பகிர்விலிருந்து பேரிடர் நிவாரணம் வரை துரோகத்தை மட்டுமே ஒன்றிய பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. 

எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு மோடி வருகிறார்?. அனைத்துத் தரப்பினரும் 10 ஆண்டு மோடி ஆட்சியில் பெரும் துயரை அடைந்துள்ளனர். எனவே, தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்த மோடி, தமிழ் மண்ணில் கால் பதிக்க எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தப்படும்' என்று அவர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் அவரது வீட்டுக்குச் சென்ற தமிழக காவல் அதிகாரிகள், பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன்கள் பறக்க விடப்படும் என்று போராட்டம் அறிவித்திருப்பதால் அவரை வீட்டுக் காவலில் வைப்பதாக அவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது  வீட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் போலீஸ் அதிகாரிகள் காவலில் ஈடுபட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress executive home arrest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->