ஊசலாடும் 16 பேரின் உயிர்.. மனிதர்களை ‘எலிகளாக்கிய’ வெளிநாட்டு நிறுவனம்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் உள்ள வெளிநாட்டு மருந்து நிறுவனம் ஒன்று தாங்கள் தயாரித்தமருந்துகளை எலிகளுக்குப் பதிலாக மனிதர்களுக்கே நேரடியாக கொடுத்து மருத்துவப் பரிசோதனை நடத்தியுள்ளது.

இந்தப் பரிசோதனையின் விளைவாக,16 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாகப் புதிதாக மருந்துகள் தயாரிக்கப்படும்போது, அந்த மருந்துகளை விலங்குகளின் மீது செலுத்தி பரிசோதனை செய்வதுதான் வழக்கம்.

புதிதாகக் கண்டுபிடித்த மருந்துகளில் இருக்கும் மூலக்கூறுகளின் கலவை சரியாக இல்லாதபோது, பரிசோதனையில் உட்செலுத்தப்படும் மருந்தினால் விலங்குகளுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். சில சமயங்களில் உயிரிழக்கும்சூழலும் ஏற்படும்.

இதன் காரணமாக இந்தப் பரிசோதனைகளில், மனித உயிரின் முக்கியத்துவத்தை அறிந்தும், அதற்கு மதிப்பளித்தும் விலங்குகளிடம் மட்டுமே பரிசோதனைகள் மேற் கொள்ளப்படும்.

ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பீடாஸர் பகுதியில் இயங்கிவரும் வெளிநாட்டு மருந்து நிறுவனம் ஒன்று, தாங்கள் தயாரித்த மருந்துகளை மனிதர் களுக்கே நேரடியாகக் கொடுத்து ஒரு விபரீத மருத்துவப் பரிசோதனையை மேற் கொண்டுள்ளது.

இந்தப் பரிசோதனைக்காகப் மனிதர்களை நாளொன்றுக்கு ரூ. 500 என்ற கூலிக்கு அமர்த்தியுள்ளது.

தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை விநியோகம் செய்வதற்கு ஆள் வேண்டும் என்றுகூறியே 21 பேரை வேலைக்குச் சேர்த்துள்ளது.

ஆனால், கடந்த மூன்று நாள்களுக்குமேலாக அந்த 21 பேரையும் மருந்து நிறுவனம் பரிசோதனையில் ஈடுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தாங்கள் தயாரித்த புதிய மருந்துகளை தொழிலாளர்கள் 21 பேருக்கு அந்தநிறுவனத்தின் அதிகாரிகள் கொடுத்துள்ளனர். அப்போது, அதனை உட்கொண்ட 16 பேரும் மயக்கமடைந்துள்ளனர்.

உடனடியாக ‘சுரு’ மாவட்டத்தில் உள்ள ஜல்பனி மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் காளி சரண் ஷராப்தெரிவித்துள்ளார்.

source: கதிர் தகவல் பெட்டகம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Complaint against hospital for using clinical trial drugs on 17 labourers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->