அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்.. துடி துடித்து பறிபோன உயிர் - தற்காலிகமாக பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு..? - Seithipunal
Seithipunal


தேக்கடி யானை சவாரி நிலையத்தில் துணை பாகனை யானை மிதித்தத்தில் உயிரிழந்தார் . சர்வதேச சுற்றுலா தலமான தேக்கடியில் சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்கிற்காக படகுச்சவாரி, யானைச்சவாரி, மூங்கில் படகு, பார்டர் வாக்கிங் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

குமுளி அட்டப்பள்ளம் பகுதியில் ஏராளமான தனியார் யானை சவாரி நிலையங்கள் உள்ளன. இங்குள்ள எலிபன்ட் ஜங்ஷன் என்ற யானைசவாரி நிலையத்தில் ஐந்து யானைகள் உள்ளன.

இதில் மீனாட்சி என்ற சவாரி முடித்துவிட்டு திரும்ப வந்துகொண்டிருந்து. யானையுடன் துணை பாகனான பாஸ்கரன் வந்துள்ளார். அப்போது யானை திடீரென பாஸ்கரனை தள்ளிவிட்டு மிதித்துள்ளது. அவரது அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் தலையில் படுகாயமடைந்த பாஸ்கரன் இறந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும், குமுளி காவல் சார்பு ஆய்வாளர் பிரசாத் தலைமையில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று யானைச்சவாரி நிலைய உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பாஸ்கரன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அங்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். முதல் பாகன் இல்லாமல் உதவியாளரான அவரே யானையை அழைத்துச் சென்றுள்ளார்.

பழக்கமில்லாததால் புதியவரின் கட்டளையை ஏற்க மறுத்து யானை அவரை தாக்கியிருக்கலாம். இருப்பினும் யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இப்பகுதியில் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Compensation-amount-to-victims-trampled-by-elephants


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->