இது காகிதப் பூ – இடைக்கால பட்ஜெட் பற்றி, கடுமையாக விமர்சிக்கும் தமிழக விவசாயிகள்…! - Seithipunal
Seithipunal


 

மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், இன்று, மக்களவையில், இடைக்கால் பட்ஜெட் போடப் பட்டுள்ளது.

அதில், 2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு, ஆண்டுக்கு 6000 ரூபாய், உதவித் தொகை மூன்று தவணைகளாக, அதாவது, 2000 ரூபாய் வீதம் 3 முறை, அந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும், என்று அறிவித்தது.

திருச்சியில் உள்ள விவசாயிகளிடம், செய்தியாளர்கள், இந்த பட்ஜெட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்கள்,

“இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. 2 ஹெக்டேர் நிலம் வைத்திருப்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். அந்த நில வரம்பை, 1 ஹெக்டேராக அறிவித்திருக்கலாம், என்று படித்த, ஒரு இளம் விவசாயி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் பெரும்பாலான விவசாயிகள், “இது காகிதப் பூ. மணம் தராது. ஏற்கனவே, மோடி இந்தியர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும், 15 லட்ச ரூபாய் வரவு வைப்பதாக அறிவித்தார். அது போல், இதுவும் வெறும் கண் துடைப்பு. இந்த அரசு, விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரான அரசு என்பதை, மீண்டும் நிரூபித்துள்ளது, என்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

comments against the budget


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->