நிறம் மாறும் விநாயகர் சிலை….! அதிசயம். ஆனால் உண்மை…! - Seithipunal
Seithipunal


 

இந்தியாவின் தென் கோடி என்று சொல்லப்படும், தமிழகத்தைச் சேர்ந்த கன்யாகுமரி மாவட்டத்தில், தக்கலை என்ற ஊருக்கு அருகில் உள்ளது, கேரளபுரம்.

இந்த ஊரில், 700 ஆண்டுகள் பழமையான சிவாலயம் உள்ளது. இந்தக் கோயிலின் பெயரே, “ஸ்ரீமகாதேவர், அதிசய விநாயகர் கோயில்” என்பது தான்.

1317-ஆம் ஆண்டு, பிற்காலப் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது தான் இந்தக் கோயில். சிவன் தான் இந்த ஆலயத்தில் மூலவராக இருக்கிறார். பாண்டிய மன்னர்களுக்குப் பிறகு, சேதுபதி மன்னர்கள் இந்த ஆலயத்தைப் புனரைப்பு செய்துள்ளார்கள்.

இந்த ஆலய வளாகத்தில் ஒரு மரத்தடியில், விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் தான், அதிசய விநாயகர் என்று அழைக்கப் படுகிறார்.

இந்த விநாயகரின் சிலை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கிறது. ஆறு மாதம் கருப்பாகவும், ஆறு மாதம் வெள்ளையாகவும் நிறம் மாறுகிறது. பழமையான இந்த சிலையில் ஏற்படும் இந்த நிற மாற்றங்கள் தான், அதிசயமாகத் தோன்றுகிறது.

பூமி சூரியனைச் சுற்றும் தட்சிணாயனக் காலத்தில், வெள்ளை நிறமாகவும், உத்தராயண காலத்தில், கருப்பாகவும் சிலையின் நிறம் மாறுகிறது.

அதாவது, ஜுலை மாதம் முதல், பிப்ரவரி மாதம் வரை, இந்த சிலை வெள்ளை நிறத்தில் இருக்கும். தற்போது இந்த சிலை வெள்ளை நிறத்தில் இருக்கிறது. வரும் மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் வரை, கருப்பு நிறமாக மாறும்.

இந்த அதிசயத்தை, நேரில் காண இந்தக் கோயிலுக்கு தற்போது மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

இப்படிப்பட்ட அதிசய வினாயகர் சிலை, நம் தமிழகத்தில் இருப்பது, நமக்குப் பெருமை தானே!

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

color changing in a Vinayagar idol


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->