புதுக்கோட்டை : விருப்பம் இருந்தால் பேருந்தில் ஏறுங்கள் - மாணவர்களிடம் கறாராக பேசிய நடத்துனர்.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை​ : விருப்பம் இருந்தால் பேருந்தில் ஏறுங்கள் - மாணவர்களிடம் கறாராக பேசிய நடத்துனர்.!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு மருதகோன்விடுதி அரசு கல்லூரி வழியாக அரசுப்பேருந்து ஒன்று சென்று வருகிறது. இந்த பேருந்தில் மருதகோன்விடுதி கல்லூரியில் படிக்கும்  மாணவ, மாணவிகள் சென்று வருவார்கள். 

இந்த நிலையில், மதியம் 2 மணிக்கு வர வேண்டிய இந்த பேருந்து கடந்த சில நாட்களாகவே தாமதமாக 3 மணிக்குத்தான் வருகிறது. அதேபோல், இன்றும் பேருந்து தாமதமாக வந்ததனால் இதுதொடர்பாக மாணவர்கள் ஓட்டுநரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை.

இதையடுத்து, மாணவர்கள் நடத்துனரிடம் சென்று கேட்டபோது, "பணிமனையில் போதுமான  ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இல்லாததனால் பேருந்து காலதாமதமாகத்தான் வரும். விருப்பம் இருந்தால் ஏறுங்கள்,  இல்லையேல் அடுத்த பேருந்தில் ஏறுங்கள்" என்று கூறியிருக்கிறார். 

அதோடு "நானே ஏழு நாளாகத் தொடர்ந்து பேருந்தில் பணியாற்றி வருகிறேன் என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்? வேண்டுமென்றால் பேருந்தை மறித்துப் போடுங்கள்" என்று மாணவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கல்லூரி நேரத்தில் அப்பகுதியில், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college students argued govt bus conductor in putukottai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->