மாநிலத்தில் இரண்டாவது மதிப்பெண் பெற்ற மாணவி.! முறையற்ற காதலால் நேர்ந்த உயிர்பலி.!! போலீசாரை உறைய வைத்த சம்பவம்.!!! - Seithipunal
Seithipunal


சிறிய வேலை இருப்பதாக கூறிவிட்டு வெளியே சென்ற கணவரை காணவில்லை என அவரது மனைவி செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை செய்தனர், 

அப்போது, திருச்சி திருவானைக்காவலை அடுத்த திருவளர்ச்சோலை அருகே காவிரி ஆற்றங்கரையோரம் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தியயத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை பொன்பரப்பியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர் சென்னையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். 

திருச்சியை சேர்ந்தியவர் கல்லூரி மாணவி ஈஸ்வரி [வயது 21]. சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்து பகுதிநேரமாக ஒரு அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி கொண்டே, சி.ஏ. படித்து வந்துள்ளார். 

அப்போது, விஜயகுமாருக்கும், ஈஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கத்தை உண்டாக்கி காதலாக மாறியது. ஒருநாள் ஈஸ்வரியை தனது அறைக்கு அழைத்து சென்று அவருடன் உல்லாசமாக விஓஜய்குமார் இருந்துள்ளார். 

மேலும் தங்கள் உல்லாசமாக இருந்ததை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவை வைத்து மிரட்டி அடிக்கடி அவர் ஈஸ்வரியிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி  வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாக ஈஸ்வரி கூறியுள்ளார். இதனை ஏற்காத விஜயகுமார், தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் விஜயகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார் ஈஸ்வரி.

கடந்த 7-ந் தேதி இரவு ஈஸ்வரியும், விஜயகுமாரும் சென்னையில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி சென்றனர். பின் விஜயகுமார் மட்டும் சொந்த ஊருக்கு சென்று தன் மனைவியிடம் ஒரு வேலை இருப்பதாக சொல்லிவிட்டு திருச்சி வந்தார் விஜயகுமார்.

இதற்கிடையே, ஈஸ்வரி வீட்டுக்கு செல்லாமல் சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, திருச்சி இ.பி ரோட்டை சேர்ந்த மாரிமுத்து (வயது 33) அனைவரையும் மிரட்டி கொண்டு இருந்தார். உடனே மாணவி ஈஸ்வரி, தன்னை உங்களுடைய தங்கைபோல் நினைத்து கொள்ளுங்கள் என கண்ணீர் விட்டு அழுது கொண்டே, தன்னை மிரட்டும் விஜய குமாரை கொலை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கொலை செய்ய சம்மதித்த மாரிமுத்து, ரூ.1 லட்சம் கேட்க, ஈஸ்வரி ரூ.55 ஆயிரத்தை தருவதாக ஒப்பு கொண்டார். இதனையடுத்து, மாரிமுத்து தனது நண்பர்களான கணேசன்(23), குமார் (25) ஆகியோருடன் சேர்ந்து, திருச்சி-கல்லணைரோட்டில் திருவளர்ச்சோலை பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு அருகில் உள்ள காவிரி கரையோரம் விஜயகுமாரை கொள்ள காத்திருந்தனர்.

இதனையறியாத விஜயகுமார், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் காத்திருந்த ஈஸ்வரியை அழைத்து கொண்டு, திட்டமிட்ட படி, அந்த இடத்திற்கு அழைத்து சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே கத்தியுடன் புதரில் பதுங்கி இருந்த மாரிமுத்து, கணேசன், குமார் ஆகியோர் பாய்ந்து சென்று விஜயகுமாரை சரமாரியாக குத்தி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

இதையடுத்து, போலீசார் மாணவி ஈஸ்வரி, மாரிமுத்து, கணேசன், குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாணவி ஈஸ்வரி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் இரண்டாவது மாணவியாக தெரிச்சிபெற்றுள்ளார் குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college girl killed her lover


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->