ஃபாரின் ரேஞ்சுக்கு மாறும் கோவை - இந்தியாவிலேயே இதுவரையில் மேற்கொள்ளப்படாத முயற்சி : உச்சம் படைத்த தமிழகம்..! - Seithipunal
Seithipunal


கோவை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் எந்தெந்த துறைகளின் பணி நடைபெற உள்ளது என்பதை கண்காணிக்கும் வகையில் ரியல் டைம் மானிட்டரிங் சிஸ்டம்என்பதை கோவை மாநகராட்சி நடைமுறைப்படுத்த உள்ளது.

கோவை மாநகராட்சி எல்லைக்குஉட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிசாலை, தேசிய நெடுஞ்சாலை, மாநிலநெடுஞ்சாலை ஆகிய சாலைகள் செல்கின்றன.

இந்த சாலைகளில் குடிநீர்குழாய் பதிப்பு, பாதாள சாக்கடைகுழாய் பதிப்பு போன்ற பலவிதகாரணங்களுக்காக தோண்டப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு பணிகளுக்காக சாலையை தோண்டும் அரசுதுறைகள் முறையாக பணியை மேற்கொள்கின்றனரா அல்லது கிடப்பில்போட்டு விடுகின்றனரா என்பதைஇணையதள பக்கத்தின் மூலம் கண்காணிக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட தகவலில், கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளின் சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை ‘ரியல் டைம் மானிட்டரிங் சிஸ்டம்’என்ற திட்டத்தின் கீழ் மாநகராட்சி இணையதள பக்கத்தில் கண்காணிக்கும் வகையிலான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பணிகள்விரைவில் முடிக்கப்படும். அதேபோல்,மாநகராட்சி இணையதள பக்கத்தின் மூலம் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பரிமாற்றங்களுக்கான பாதுகாப்பை மேலும் பலப்படுத்த தேவையான மாற்றங்களும் இணையதள பக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதுகாப்பாக கட்டணம் செலுத்துதலின் ஓர் பகுதியாக‘டிஜிட்டல் இந்தியா சேலஞ்ச்’என்றமத்திய அரசின் சிறப்பு திட்டப்பிரிவின் கீழ் 10 வகையான நிபந்தனைகள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதை பூர்த்தி செய்து ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் இணையதள பக்கத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும்' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coimbatore real time monitoring


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->