10 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை.. கழிவை சுமந்த தமிழக மண் வளம் கொழிக்கும் பூமியாகப்போகிறது - மத்திய அரசு அறிவித்துள்ள அதிரடி திட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிலக்கரியால் ஏற்படும் சாம்பல் கழிவுகளிலிருந்து தாதுப்பொருட்களைப் பிரித்தெடுக்கும் ஆலை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதி ஆயோக்கின் முழுநேரஉறுப்பினரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் செயலாளருமான டாக்டர் சரஸ்வாத் சென்னை அருகே செங்குன்றத்தில் அமைந்துள்ள இந்த ஆலையைத் தொடங்கிவைத்தார்.

இந்த முன்னோடி ஆலையில் அலுமினியம் ஆக்சைடு மற்றும் இரும்பு ஆக்சைடு, உட்பட பேரியம், பெரீலியம், போரான், கேட்மியம், குரோமியம், குரோமியம், கோபால்ட், காப்பர், மாங்கனீசு நிக்கல் உள்ளிட்ட உயர் மதிப்பு வாய்ந்த தாதுப்பொருட்களைப் பிரித்தெடுக்கமுடியும்.

இந்த ஆலை கழிவு கொள்ளளவைக் குறைக்கும் ஒரு கட்டுப்படியாகும் தன்மைகொண்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கத்தக்க இம்முன்முயற்சியை வரவேற்ற சரஸ்வாத் கழிவிலிருந்து மதிப்புமிக்க பொருட்களைஉருவாக்கும் தனது சொந்த தொழில்நுட்பத்தை ரூ.250 கோடி முதலீட்டில் `ஹிந்துஸ்தான்காப்பர் லிமிடெட் ஆலையில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த புதிய ஆலையால் 10ஆயிரம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர் என்று அவர் கூறினார்.

நிதி ஆயோக் அமைப்பின், துணை ஆலோசகர் (தாதுப்பொருட்கள்) சு சரவணபவன், பதக் உள்ளிட்ட பலர் இதுகுறித்த அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coal fog ash recycle plant chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->