முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீடியோ காட்சி - உண்மையில் அங்கு நடந்தது..? மூக்குடைக்கப்பட்ட திமுகவினர்.! - Seithipunal
Seithipunal


சேலத்தில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஒரு வீடியோ பரப்பப்பட்ட நிலையில், அது இட்டுக்கட்டப்பட்ட அவதூறு என முதலமைச்சர் விளக்கமளித்திருக்கிறார்.

தேர்தல் பிரசாரத்தின் போது முதல் அமைச்சர் வாக்குக்கு பணம் கொடுத்ததாக வீடியோ காட்சியை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர்.

உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பது குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, பெட்டிகடையில் இருந்த பெண் ஒருவர் முதல்வருக்கு அன்பாக பழங்களை வழங்கினார்.

இதனை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், அதற்கு உரிய தொகையை அந்த பெண்ணிடம் அளித்தார். இதனை திமுகவினர் அவதூறாக சித்தரித்து அவதூறு பரப்பி வந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, திமுகவினரை போன்று இலவசமாக நாங்கள் எந்தப்பொருளையும் வாங்குவதில்லை என விளக்கம் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM-explanation-money-paid-to-fruit-shop-woman


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->